அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 26ம் தேதி நடக்கிறது

அரியலூர்,பிப்.24: அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மாதத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். மேலும் கொரோனோ காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>