காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியராக்க கோரி 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் கும்மியடித்து, ஒப்பாரி வைத்தனர்

பெரம்பலூர்,பிப்.24: காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.

38ஆண்டுகளாக குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணிகள் மட்டுமல்லாமல், பிற அரசு துணை பணிகளையும் செய்துவரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 22ம்தேதி முதல் தமிழக அளவில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பெரம்பலூரிலும் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் மேனகா தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் தங்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வரை காத்திருப்பு போராட்டம் ஓயாது எனக்கூறிய அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் களைந்து செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதற்காக கலெக்டர் அலு வலக சிறுவர் பூங்காமுன் சாலையோரம் சாமியானா பந்தல் அமைத்து உணவருந்தினர். பின்னர் விடிய விடிய சாலையோரத்திலேயே படுத்துத்தூங்கிவிட்டு நேற்று காலை 500க்கும் மேற்பட்டோர் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கூட் டம் கூட்டமாக கூடி கும்மியடி ஒப்பாரி வைத்தனர்.

Related Stories:

>