×

எந்த பொத்தனை அழுத்துவது என தெரியாமல் தடுமாறிய திண்டுக்கல் சீனிவாசன்: வாக்குசாவடியில் பரபரப்பு

 

திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன், இன்று காலை வாக்களிப்பதற்காக தனது மனைவி, மகன்களுடன் எம்விஎம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் உள்ள 156வது வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். பூத் சிலிப்பை சரிபார்த்து கை விரலில் மை வைத்த பின்னர், வாக்களிக்கும் இயந்திரம் அருகே சென்றார். வாக்கு இயந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்துவதற்கு பதிலாக, அருகில் ஓட்டு போட்டால் சிகப்புக் கலரில் எரியும் சிக்னல் லைட்டை அழுத்தினார்.

இதனால், அவரது ஓட்டு பதிவாகவில்லை. இதையடுத்து அதிகாரிகள், ‘அழுத்தின இடத்தில் பச்சை லைட் எரியுதா, அந்தப் பக்கம் சின்னம் தெரியுதா என கேட்டனர். இதற்கு திண்டுக்கல் சீனிவாசன் வரலையே அம்மா என பதில் கூறினார். உடனே பெண் அதிகாரி ‘பட்டனை நல்லா அழுத்துங்க’ சார் என்றார். உடனே திண்டுக்கல் சீனிவாசன், ‘எம்மா இங்கே வாங்க என அதிகாரியை உதவிக்கு அழைத்தார். வாக்களிக்க தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த சீனிவாசன் அருகே சென்ற பெண் அதிகாரி இயந்திரத்தைக் காட்டி வாக்களிப்பது குறித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து திண்டுக்கல் சீனிவாசன் அதிகாரி உதவியுடன் வாக்களிக்கும் பொத்தானை அழுத்தினார். இதையடுத்து பீப் சவுண்ட் வரவே அங்கிருந்து வெளியே சென்றார்.

 

Tags : Dindigul Sinivasan ,Dindigul ,Dindigul Assembly Constituency ,Supreme ,centre ,MVM Kings Women's College of Arts ,
× RELATED தமிழ்நாட்டில் நடைபெற்று வரும்...