பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தோகைமலை. பிப். 24: கரூர் மாவட்டம் தோகைமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை ஏற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தோகைமலை ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமை வகித்தார்.இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இலக்குவன், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை ஏற்றத்த்திற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள் பாலசுப்ரமணி, தங்கராசு, ரமேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>