3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

அரவக்குறிச்சி, பிப். 24: அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் குடியேறும் போராட்டத்தை துவங்கியுள்ளனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்9.துவங்கிய அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது. அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் குடியேறும் போராட்டம் தொடர்ந்து. இரவு முழுவதும் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்டு உறங்கி போராட்டம் தொடரும் எனக் கூறி தாலுகா அலுவலக வளாகத்திலேயே இரவும் கடும் பனியிலும் 35க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில குழு கூட்டத்தில், அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய சமூக நலத்துறை செயலாளர், எஸ். மதுமதி அவர்கள் ஒருவார கால அவகாசம் கோரியது குறித்து விவாதிக்கப்பட்டது. அரசு சார்பில் கோரி உள்ளபடி ஒருவார கால அவகாசம் கொடுக்கலாம் என்றும், மாநிலக்குழு தீர்மானிக்கப்பட்டது. எனவே, இந்த கால அவகாசத்தில் அரசு மாற்றுத்திறனாளிகளின் சட்டப்பூர்வ மற்றும் நியாயமான கோரிக்கைகளை குறிப்பாக தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களைப் போல குறைந்தபட்சம் ரூ.3,000 மாத உதவித்தொகை, கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5000 வழங்க உத்தரவிட வேண்டும். தனியார் துறை பணிகளிலும் சட்டப்படி 5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான உத்தரவாதத்தை அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனால் அரவக்குறிச்சியில்தற்காலிகமாக போராட்டத்தை கை விட்டனர். இந்நிலையில் அரசு சார்பில் ஒருவார கால அவகாசம் கோரிய படி எந்த வித நடவடிக்கையும் இல்லாததால்அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் குடியேறும் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

Related Stories:

>