×

மேற்குவங்க தேர்தல் – வாக்குச்சாவடிக்கு திடீர் வருகை தந்த யானையால் பரபரப்பு

ஜார்கிராம்: மேற்குவங்கத்தில் வாக்குசாவடிக்குள் காட்டு யானை ஒன்று நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் அருகே வாக்குச்சாவடிக்கு வெளியே காட்டு யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்த போது, ​​ஒரு வாக்குச்சாவடிக்கு அருகே யானை ஒன்று தோன்றிய விசித்திரமான காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜார்கிராம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஜிதுஷோல் தொடக்க பள்ளி வாக்குசாவடிக்கு மிக அருகே, வாக்குப்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே ராம்லால் என குறிப்பிடப்படும் காட்டு யானை காணப்பட்டது.

வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, அந்த யானையை பார்க்க அப்பகுதி மக்கள் பெருந்திரளாக அங்கு கூடினர். எனினும் வாக்குச்சாவடிக்கு அருகில் வந்த குறிப்பிட்ட காட்டு யானை, பின்னர் தானாகவே நகர்ந்து சென்றது. இதனால் வாக்குசாவடிக்குள் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதன் போது எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்றாலும், அந்தப் பகுதியில் யானையின் நடமாட்டம் காரணமாகப் பாதுகாப்பு எச்சரிக்கை நிலை அதிகரிக்கப்பட்டது.

2026 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் முதல் கட்டத்தை முன்னிட்டு, யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிகாரிகள் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தனர். குறிப்பாக மாநிலத்தின் தென்பகுதியில் சுமார் 25 வாக்குச்சாவடிகள், யானை வழித்தடங்களுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால், ‘பாதிப்புக்குள்ளாகக்கூடியவை’ என அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தகைய இடங்களில் சுமார் 60 சதவீத இடங்கள் ஜார்கிராம் மாவட்டத்திலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிதுசோல் தொடக்கப்பள்ளிக்கு அருகே நிகழ்ந்த வாக்காளர்களிடையே சிறிது நேரம் பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது. யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை முன்னரே அடையாளம் கண்டு எச்சரித்திருந்ததால், எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags : Jargram ,Jharkram, ,
× RELATED மேற்கு வங்க மாநில முதற்கட்ட தேர்தலில்...