வருவாய்த்துறை அலுவலர்கள் 7வது நாளாக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.24: கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 7வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த 7 நாட்களாக பணிக்கு செல்லாமல் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெயபிரபா, மத்திய செயற்குழு உறுப்பினர் மதுசெழியன், வட்டத்தலைவர் சலீம்பாஷா, வட்ட செயலாளர் அல்லாபாஷபப ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர்.தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்துறை சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாசில்தார் தண்டபாணி, தனி தாசில்தார் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: