- கந்தர்வகோட்டை பேருந்து நிலையம்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- கந்தர்வகோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை, ஏப்.23: கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மக்கள் கூட்டம் நிரம்பியது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பியது. இப்பகுதி மக்கள் இங்கு எந்ததொரு தொழில்சாலை இல்லாதாதல் திருச்சி, ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், மதுரை போன்ற நகர்புறங்களில் பணி செய்து வருகிறார்கள்.
இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல், மற்றும் திருவிழாவிற்கு வருவது வழக்கம். தற்சமயம் தமிழக சட்டமன்ற தேர்தல் திருவிழ நடைபெறுவதால் அவரவர் ஊரில் வாக்கு அளிக்க பேருந்துகளில் வந்து இறங்கி கிராமங்களுக்கு ஆட்டோ, நகர பேருந்து, உறவினர்களின் இருசக்கர வாகனங்களில் வீடுகளுக்கு செல்லுகிறார்கள். கந்தர்வகோட்டை பகுதியில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது அதை கந்தர்வகோட்டை கிளைமேலாளர் சக்திவேல் தொடங்கி வைத்தார். இன்று தனது ஜனநாக கடமைக்காக வந்து உள்ளது மிகவும் மனநிறைவை தந்துள்ளது என்று கூறினர்.
