×

பொன்னமராவதி தாலுகாவில் வாக்காளர்கள் வாக்களிக்க 107 வாக்குச்சாவடி தயார்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

பொன்னமராவதி ஏப்.23: பொன்னமராவதி தாலுகாவில் 107வாக்குச்சாவடியில் இன்று வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பொன்னமராவதி தாலுகாவில் உள்ள பொன்னமராவதி, அரசமலை, காரையூர் பிர்கா பகுதிகளை உள்ளடக்கிய 107 வாக்குச்சாவடி மையத்தில் குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தின் முன்பு வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக வாக்காளர்கள் நிற்பதற்காக சாமியான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குச்சாவடி சென்று வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணி மேற்கொள்ளும் வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சிச்சித்துளை, ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று மாலையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் சென்று தங்களது பணியனை தொடங்கினர்.

இதே போலஅனைத்து வாக்குச்சாவடிக்கும் வாக்குபெட்டி இயந்திரம் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சேர்ந்தது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பகுதியில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற தேர்தல் ஆணையம் அனைத்து பாதுப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துள்ளது.

 

Tags : Ponnamaravathi taluka ,Ponnamaravathi ,Tamil Nadu ,Arasamalai ,Karaiyur Birga ,Ponnamaravathi taluka… ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்