கிருஷ்ணகிரியில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.24: மாவட்ட  நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், வரும் 26ம் தேதி காலை  10.30 மணியளவில், வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறை  தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர்  ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகிக்கிறார். குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்  விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து  கொள்ளலாம். குறைதீர் கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள் கொரோனா தடுப்பு  வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>