மயிலாடுதுறை, ஏப். 23: வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் வாக்களிக்கும் முறை குறித்து அலுவலர்கள் கூறியிருப்பதாவது: வாக்கு சாவடியில், முதலில் இருக்கும் அலுவலரிடம் வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையினை காண்பிக்க வேண்டும். அந்த அடையாள அட்டையை அலுவலர் சரிபார்த்த பின்னர் வாக்களிப்பதற்காக விரலில் அழியாத மையினை மற்றொரு அலுவலர் வைப்பார்.
அதன் பின்னர் வாக்காளர் பதிவேட்டில் பெயர் சரிபார்க்கப்பட்ட பின்னர் கையெழுத்திட வேண்டும். 4வதாக வாக்காளர்களுக்கான வாக்கு சீட்டினை அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அலுவலர் வழங்குவார். பின்னர் அந்த வாக்கு சீட்டினை 5வது அலுவலர்களிடம் கொடுத்து அதன் பின்னர் 6வதாக வாக்கு பதிவு இயந்திரத்துக்கு சென்று தங்களுக்கு விருப்பமான வேட்பாளர் பெயர் இருக்கும் சின்னத்தில் பொத்தானை அழுத்த வேண்டும்.
அவ்வாறு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் போது இரண்டு முறை அழுத்தாமல் ஒரு முறை மட்டுமே அழுத்த வேண்டும். வாக்கு பதிவு செய்யும்போது மின்னணு இயந்திரத்தில் சிகப்பு லைட் எரிகிறதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். உடனே அருகில் இருக்கும் விவிபேட் இயந்திரத்தில் சின்னத்துடன் வரும் பேப்பரை பார்த்து தாங்கள் வாக்களித்த சின்னத்துடன் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
