- குறுவை
- தரங்கம்பாடி
- மயிலாதுதுரை மாவட்டம்
- பொரையார்
- அயப்பாடி
- திருக்கல்லாச்சேரி
- நுல்லக்கட்டிசதனூர்
- இலுப்பூர்
- Sankaranpandal
- நெதுவாசல்
- திருவிலாயுதம்
- ஈச்சங்குடி
- கடலி
- தில்லையடி
- Thirukadaiyur
தரங்கம்பாடி, ஏப். 23: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் சம்பா தாளடி பயிர்கள் சாகுபடிக்கு பிறகு குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனார். பொறையார், ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்துகட்டிசாத்தனூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், நெடுவாசல், திருவிளையாட்டம், ஈச்சங்குடி, கடலி, தில்லையாடி, திருக்கடையூர், உள்ளிட்ட பல பகுதிகளில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட துவங்கி உள்ளனர்.
பாய் நாற்றங்கால் மூலம் விதை விடுதல் போன்ற பணியை தொடங்கி உள்ளனர். குறுவை சாகுபடிக்கு கோ 51, ஆடுதுறை 43, ஆடுதுறை 45 ஆகிய பழைய ரக விதைகளையும் புது ரகமான ஆடுதுறை 59, அம்பாசமுத்திரம் 21 உள்ளிட்ட புதுரக விதைகளையும் பயிர் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
