×

கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்

கரூர், ஏப். 23: கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரை விழாவினை முன்னிட்டு நேற்று காலை திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு புற்றுமண் பூசை செய்து பாலிகை தெளித்தல் நிகழ்வுக்கு பிறகு நேற்று காலை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் திருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து 23ம்தேதி முதல் 27ம்தேதி வரை பலவேறு அபிஷேக ஆராதனை நிகழ்வுகளும், 28ம்தேதி பூந்தேர் (புஷ்பகவிமானம்) நிகழ்வும், 30ம்தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும் நடைபெறுகிறது. இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்யவுள்ளனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 

Tags : Chithirai ,Karur Abhayapradhana Renganatha Swamy Temple ,Karur ,Chithirai festival ,Karur Abhayapradhana ,Renganatha ,Swamy Temple ,Chithirai… ,
× RELATED பெரியாண்டாங்கோயில் பகுதியில் தண்ணீர்...