×

திருவள்ளூர்  வைத்திய வீரராகவர் கோயிலில் கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோற்சவ விழா ஆரம்பம்

திருவள்ளூர், ஏப்.23:திருவள்ளூரில் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான வரும் 28ம் தேதி தேரோட்டமும், 30ம் தேதி தீர்த்த வாரியும் நடக்கவுள்ளது. திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று (22ம் தேதி) தொடங்கியது. இவ்விவழா, மே மாதம் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி நேற்று புதன்கிழமை காலை 4.15 மணிக்கு த்வஜாரோஹனம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு 5.30 மணிக்கு தங்க சப்பரம் புறப்பாடும், 11 மணிக்கு திருமஞ்சனமும் நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் சிம்ம வாகனத்தில் வீரராகவர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் வீதி புறப்பாடு நடைபெற்றது.

இன்று (23ம் தேதி) வியாழக்கிழமை காலை 5 மணிக்கு ஹம்ச வாகனத்தில் வீதி புறப்பாடும், 9:30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு சூரிய பிரபை புறப்பாடும், நாளை (24ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு கருட சேவை (கோபுர தரிசனம்), 6 மணிக்கு வீதி புறப்பாடும், மாலை 3 மணிக்கு திருமஞ்சனமும் இரவு 7.30 மணிக்கு அனுமந்த வாகனத்தில் வீதி புறப்பாடும் நடைபெறுகிறது. அதேபோல், 25ம் தேதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பாடும், 10 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு சந்திர பிரபையும், 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு நாச்சியார் திருக்கோலமும், 10.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு யாளி வாகனத்தில் வீதி புறப்பாடும் நடைபெறுகிறது.

மேலும், 27ம் தேதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலம் சூர்ணாபிஷேகமும், 6 மணிக்கு வெள்ளி சப்பரமும், 10.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு யானை வாகனமும், 28ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 5.15 மணிக்கு தேருக்கு எழுந்தருளுதலும் 7:30 மணிக்கு தேர் புறப்பாடும், இரவு 6.30 மணி அளவில் தேரிலிருந்து எழுந்தருளி திருமஞ்சனமும், இரவு 9:30 மணிக்கு கோவிலுக்கு எழுந்தருளும் நடைபெறுகிறது. 29ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 3 மணிக்கு திருப்பாதம் சாடி திருமஞ்சனமும், இரவு ஏழு 7.30 மணிக்கு குதிரை வாகனமும், 30ம் தேதி வியாழக்கிழமை காலை 4 மணிக்கு ஆள் மேல் பல்லக்கும், 10:30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 7:30 மணிக்கு விஜயகோடி விமானமும் நடைபெறுகிறது. வரும் மே மாதம் 1 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திருமஞ்சனமும், 10:30 மணிக்கு துவாதச ஆராதனையும், இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கும், 11:30 மணிக்கு த்வஜ அவரோகணமும் நடைபெறுகிறது. இந்த பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் கௌரவ ஏஜென்ட் ஸ்ரீ ரங்கநாதன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் கோயில் அலுவலர்கள் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags : Thiruvallur  ,Chithirai Brahmotsavam festival ,Vaidya Veeraragarhavar Temple ,Thiruvallur ,Sri Vaidya Veeraragarhavar Temple ,Theertha Vairi ,Sri… ,
× RELATED காரில் கடத்தி வந்த புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்