கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

தர்மபுரி, பிப்.24:தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியராக்க வேண்டும் என வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் 2வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் கவிதா தலைமை வகித்தார். செயலாளர் லில்லிபுஷ்பம், பொருளாளர் ஈஸ்வரி, மாவட்ட நிர்வாகிள் தெய்வானை, முருகம்மாள், ராஜம்மாள், சுமதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியூ மாவட்ட செயலாளர் நாகராசன், மாநிலக்குழுஉறுப்பினர் அங்கம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். காத்திருப்பு போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதில், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் பணி ஓய்வு பெறும்போது பணி கொடையாக ஊழியருக்கு ₹10லட்சமும், உதவியாளருக்கு ₹5லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்நிலையில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கேயே படுத்து கொண்டனர். இதையொட்டி, போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: