ஜவளிக்கடைக்கு தீ வைப்பு

அரூர், பிப்:24: அரூர் அடுத்த கோட்டப்பட்டி ராஜவீதியில் துணி கடை வைத்திருப்பவர் வடிவேல் மனைவி பேபி(40). இவர்களது மகன் மணிகண்டன், அதே பகுதியை சேர்ந்த ராஜசேகரன் மகள் அர்ணிகாவை காதலித்து வந்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு உள்ளது. இந்த பிரசனையில்  முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு  ராஜசேகர், பேபி நடத்தி வரும் கடையின் ஷட்டரை உடைத்து, கடைக்கு தீ வைத்துள்ளார். இதில் ₹1.20 லட்சம் ரொக்கம், ₹5லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து பேபி அளித்த புகாரின் பேரில், கோட்டப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>