மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

தர்மபுரி, பிப்.24: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே  மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நேற்று நடத்தினர். அதன்பின் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்திற்கு, மாநில பொருளாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் சுசீலா, பொருளாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அருகில் உள்ள மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ₹3000 வழங்கப்படுவது போல், தமிழகத்திலும் வழங்க வேண்டும். தனியார் துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.பென்னாகரம்: பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கருவூரான் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதே ேபால், நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் ஒன்றிய தலைவர் துளசிமணி தலைமையில் நடந்தது. தாசில்தார் சரவணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதை ஏற்காமல், இரவு வரை போராட்டம் நடத்தினர். அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன் மாவட்ட துணை தலைவர் உதயகுமார் தலைமையில் போராட்டம் நடந்தது.

Related Stories: