வீட்டில் பதுக்கிய 758 மதுபாட்டில்கள் பறிமுதல்

தர்மபுரி, பிப்.24: தொப்பூர் பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்துரான்கொட்டாய் பகுதியில் போலீசார் சோதனையிட்டபோது, அங்கு மூர்த்தி என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 758 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மூர்த்தி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து, தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>