மதுராபுரியில் மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி, பிப்.24:  சிங்கம்புணரி அருகே மதுராபுரியில் உச்சி கருப்பர் கோயில் மாசி படைப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சு விரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளை கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்படது. காலை 10 மணிக்கு முதலாவதாக கோயில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. மதியம் 1 மணிவரை வயல்வெளியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகளை பிடிக்க இளைஞர்கள் போட்டி போட்டு காளையை அடக்கினர். இதில் பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் போக்கு காட்டி ஒடியது ஒரு சில காளைகள் மட்டுமே பிடிபட்டது. இதில் காயமடைந்த 10க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு பிரான்மலை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மஞ்சுவிரட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Related Stories: