பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கார்,வேன் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

காரைக்குடி, பிப்.24:  காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு காரைக்குடி டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம், அன்னை தெரசா சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், அனைத்திந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவை மற்றும் டாக்டர் வள்ளல் அழகப்பர் டூரிஸ்ட் கார், வேன் ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். டோல்கேட்டில் பாஸ்ட்டேக் கட்டாயம் என்பதை திரும்ப பெற வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை உபயோகப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இசலான் மூலம் தேவையற்ற அபராதம் விதிப்பதை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுபோல் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பும் போராட்டம் நடந்தது.

Related Stories:

>