ஜமாஅத் கூட்டமைப்பு அலுவலகம் திறப்பு

கீழக்கரை, பிப்.24:  கீழக்கரையில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அலுவலகம் திறப்பு விழாவை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் கீழக்கரையை சேர்ந்த எம்.எம்.ஜே.உம்முல் பரிதா,என்.சிவபழனி ஆகிய நீதிபதிகளை கௌரவிக்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி, கோவில், தேவாலயங்களுக்கு சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டன. எம்பி நவாஸ்கனி ஜமாஅத் கூட்டமைப்பு அலுவலகத்தை திறந்து வைத்தார். அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் ஹாமீது இப்ராஹிம், கீழக்கரை காவல் நிலையத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசனிடம் கணினி மற்றும் பிரிண்டர் வழங்கினார். துணை தலைவர் உமர் அப்துல் காதர் களஞ்சியம் நீதிபதிகளை கௌரவித்தார். மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஷாஜஹான் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் ஷேக் ஹுசைன் வரவேற்றார்.

விழா ஏற்பாடுகளை நடுத்தெரு ஜமாஅத் துணை செயலாளர் ஹபீப் முஹம்மது தம்பி, கிழக்குத் தெரு ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது அஜிஹர்,பழைய குத்பா பள்ளி தலைவர் அபுதாஹிர், செயலாளர் மூர் ஜெயினுதீன்,மூர் ஹசனுதீன்,மூர் நவாஸ் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். மேலும் மக்கள் டீம் காதர், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர் தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் உதவிசெயலாளர் சீனி செய்யது இப்ராஹிம் நன்றி கூறினார்.

Related Stories: