திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.14 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சூர் பட்டாசு விபத்தை மாநில பேரிடராக அறிவிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
