×

தைல மர தோப்பில் தீப்பிடித்து சேதம்

 

கறம்பக்குடி, ஏப். 22: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சேவகன் தெரு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் விவசாய தொழிலாளி. இவருக்கு சொந்தமான தைல மர தோப்பு ஒன்று உள்ளது. நேற்று மதியம் தைல மர தோப்பு திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு பாபில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். குறிப்பாக உள்ளே செல்ல முடியாத அளவிற்கு ஆர்எஸ் பதிகள் படர்ந்து இருந்ததால் இலை, தலைகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். அதன் பின்னர் தண்ணீரை அடித்து, தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீவிபத்து நடந்துள்ளதா? அல்லது விஷமிகள் வீசி சென்ற நெருப்பினால் இந்த தீ விபத்து நிகழ்ந்ததா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Karambakudi ,Sevakan Street ,Karambakudi, Pudukkottai district ,Manikandan ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்