தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

ஆறுமுகநேரி,பிப்.24: வடக்கு ஆத்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(70).  தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கும் மேல சேர்ந்தப்பூமங்கலம் முருகானந்தம்(65) என்பவருக்கும் வேலை சம்பந்தமாக பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்துள்ளது.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகத்தை முருகானந்தம் வழிமறித்து தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகத்தை வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>