×

திண்டுக்கல் மாநகராட்சியிலுள்ள 48 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை: திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் உறுதி

 

திண்டுக்கல், ஏப். 22: திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தொகுதி முழுவதும் சுறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு திராவிட மாடல் அரசின் 5 ஆண்டுகால சாதனை திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இறுதிகட்ட பிரசாரமாக நேற்று மாலை வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் ரவுண்ட் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் பேரணியை துவக்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மதுரை ரோடு பூதமரத்துபட்டி பகுதியில் நிறைவு செய்தார். வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை செய்தும் வரவேற்றனர்.

Tags : Dindigul Corporation ,DMK ,I.P. Senthilkumar ,Dindigul ,Dindigul Assembly ,MLA ,
× RELATED ராமேஸ்வரத்தில் பரபரப்பு பற்றி எரிந்தது படகு