×

எலுமிச்சை செடியில் வெள்ளை ஈ தாக்குதலா?

 

பழநி, ஏப். 22: பழநி தோட்டக்கலை துறையினர் கூறியதாவது: எலுமிச்சை செடிகளில் மாவுப்பூச்சி, வெள்ளை ஈக்களின் தாக்குதலால் செடிகளின் கொழுந்துகள் தங்களின் முளைப்பு தன்மையை இழந்து விடும். மேலும் காய்கள் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகி புள்ளிகள் விழுந்து பழங்கள் ஆக தகுதியற்றதாகி விடும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதனை தடுக்க பாதிப்பின் ஆரம்ப கட்டமாக இருந்தால் வேம்பு எண்ணெய்யை கலந்து அடித்தால் போதுமானது. முற்றிய நிலையில் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி புரபனோபாஸ் கலந்து அடிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீருடன் 6 மில்லி இமியோகுளோபிரிட் கலந்து அடிக்கலாம். அல்லது 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் நீட்டோமைல் கலந்து கைப்பம்பு மூலம் அடிக்கலாம். பார்த்தீனிய செடிகளின் மூலமே இப்பூச்சி பரவுவதால் விவசாயிகள் இச்செடிகளை உடன் அகற்றி விட வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Palani ,Palani Horticulture Department ,
× RELATED குலசை கோயில் வருஷாபிஷேக விழா