×

ரூ.22 லட்சத்தில் வாடிவாசல் கலையரங்க மேடை

 

தோகைமலை, ஏப். 21: தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் ஜல்லிகட்டு விழா நடைபெறும் வாடிவாசல் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாடிவாசல் கலையரங்க மேடை அமைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் பிரசிதி பெற்ற ஜல்லிக்கட்டு விழா ஆண்டுகள் தோறும் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை அன்று தை மாதம் 3ம் நாள் அன்று ஜல்லிக்கட்டு விழா கிராம மக்கள் சார்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆர்.டி.மலையில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பிடாரி அம்மன் கோயில் அருகே வாடிவாசல் உள்ளது. பிரசிதிபெற்ற ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் வாடிவாசல் கலையரங்கமேடை அமைக்க குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திடம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, முன்னால் ஒன்றிய கவுன்சிலர் சின்னையன், மாவட்ட பிரதிநிதி சந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Wadiwasal Art Gallery Stage ,Dogaimalai ,Dokaimalai, R. D. ,Vadiwasal Art Stage ,Wadiwasal ,Jallikatu Festival ,Karur District Dokaimalai ,R. D. ,Jallikatu ,
× RELATED கரூர் அமராவதி ஆற்றங்கரையில் சீத்த...