×

குட்கா விற்பனை செய்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு

 

கரூர், ஏப். 21: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குட்கா பொரு ட்களை விற்பனை செய்ய முயன்றதாக இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், கரு்ர் மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும், மாவட்டத்திற்குட்பட்ட அந்தந்த காவல் நிலைய போலீசார்களும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து, குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

Tags : Karur ,Karur district ,District SP ,
× RELATED கரூர் அமராவதி ஆற்றங்கரையில் சீத்த...