×

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவம் கொடியேற்றம்

 

சீர்காழி. ஏப்.22: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட தேவாரப்பாடல் பெற்ற  சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார். மேலும் காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இந்த கோயிலில் சிவபெருமான்  பிரமபுரீசுவரர்,  தோணியப்பர் மற்றும்  சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். கோயிலில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தக் குளகரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் 2ம் நாள் திருமுலைப்பால் விழா நடைபெறுவது வழக்கம்

Tags : Sirkazhi Sattainathar Swamy Temple ,Thirumulaipal ,Brahmotsavam ,Sirkazhi ,Sirkazhi, Mayiladuthurai district ,Sattainathar Swamy Temple ,Dharmapura Aadeena ,Thirunilil ,Nayaki Ambal ,Brahmapureeswarar ,Swamy ,Kashi ,Ashta Bhairava… ,
× RELATED ராமேஸ்வரத்தில் பரபரப்பு பற்றி எரிந்தது படகு