நாங்குநேரி தொகுதி, பாளை ஒன்றிய பகுதி ஏழை பெண்கள் திருமணத்திற்கு தங்கம், நிதியுதவி ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ வழங்கினார்

நெல்லை, பிப். 24:  நாங்குநேரி தொகுதி, பாளை ஒன்றியத்தைச் சேர்ந்த ஏழை பெண்கள்  820 பேரின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி ஆகியவற்றை பாளையங்கோட்டையில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ வழங்கினார்.  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு  திட்டத்தின் கீழ் தமிழக அரசு சார்பில் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு  தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாங்குநேரி தொகுதி, பாளை ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த படித்த ஏழைப்பெண்கள் 820 பேரின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கும் விழா பாளையில் நடந்தது. தலைமை வகித்த ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ, பள்ளி படிப்பு படித்த 33  பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் பட்டப்படிப்பு படித்த 120 பெண்களுக்கு ரூ. 60 லட்சம், 153 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ. 54,71,586 மதிப்பீட்டில் மொத்தம் 1 கிலோ 224 கிராம் தங்க காசுகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றார். விழாவில் பாளை ஒன்றிய பிடிஓக்கள் செந்தில் சங்கரநாராயணன், சங்கர்ராம், தங்கராஜ், கோபிநாத், அதிமுக பாளை ஒன்றியச் செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், நாங்குநேரி ஒன்றிய துணைச்செயலாளர், சிறுமளஞ்சி சிவா, முத்தூர் ஊராட்சி முன்னாள் செயலாளர் நயினார், மாவடி காமராஜ் விக்ரம் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: