பாவூர்சத்திரத்தில் கையெழுத்து இயக்கம்

பாவூர்சத்திரம், பிப்.24: நர்சரி- பிரைமரி பள்ளிகளை திறக்கக்கோரி பாவூர்சத்திரத்தில் 1 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு நர்சரி- பிரைமரி பள்ளிகளின் நலச்சங்க ஆலோசனை கூட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்தது. தென்காசி மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இன்பராஜ், பிரபாகரன், செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் இலஞ்சிகுமரன் வரவேற்றார். நெல்லை மாவட்டத் தலைவர் முத்துமணி, மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் லூர்துசாமி, மாநில துணைத்தலைவர் ருபிநாத் வாழ்த்திப் பேசினர்.

கூட்டத்தில் நர்சரி-பிரைமரி பள்ளிகளை உடனடியாக திறக்கக்கோரி 1 லட்சம் கையெழுத்து பெற்று முதல்வர், கல்வி அமைச்சருக்கு அனுப்புவது, ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க ஆசிரியர்கள் நலவாரியம் அமைக்க வேண்டும். கொரோனா ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கான முதல் கையெழுத்தை தென்மண்டல செயலாளர் ஆனந்தகுமாரும், பெற்றோர்களுக்கான முதல் கையெழுத்தை மாநில பொதுச்செயலாளர் சதீசும் பெற்று தகவல் மற்றும் ஊடக பிரிவின் தலைவர் பெரியசாமியிடம் வழங்கினர். ஏற்பாடுகளை லதா, உஷா, மோதிலால் நேரு செய்திருந்தனர். மாவட்ட பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

Related Stories: