நேர்முகத் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் விடுதி சமையலர் பணிக்கு நடந்த

திருவண்ணாமலை, பிப்.24: விடுதி சமையலர் பணிக்கு நடந்த நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு, தலித் விடுதலை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். மூக்நாயக், ராமர், கதிர்காமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆதி திராவிடர் நலத்துறை மாணவர் விடுதிகளில் 42 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு சமீபத்தில் நடந்தது.

அதில் முறைகேடு நடந்திருக்கிறது. முன்னுரிமை பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கவில்லை. எனவே, சமையலர் பணிக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடைபெற வேண்டும். மேலும், இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சதிர்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Stories:

>