எந்த ஆட்சியிலும் குற்றங்களை தடுக்க முடியாது ஆரணியில் செல்லூர் ராஜூ பேட்டி

ஆரணி, பிப்.24: எந்த ஆட்சியிலும் குற்றங்களை தடுக்க முடியாது என்று ஆரணியில் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில் கூறினார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன்- மணிமேகலை தம்பதியரின் மகன் ஆர்.விஜயகுமாருக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூர் கே.கிரிராஜன்- உமாமகேஸ்வரி தம்பதியின் மகள் மீனதர்ஷனிக்கும் ஆரணி- சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடைப்பெற்றது. இதில், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அப்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திருமணத்தில் கலந்து கொண்டு மணக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சசிகலாவை பற்றி பேச தற்போது நேரம் இல்லை, மற்றதை பேசுவோம். இந்தியாவிலேயே எந்த முதல்வரும், ஆய்வு பணிகளுக்காக மாவட்டம்தோறும் செல்கிறாரா? நமது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மட்டுமே, தமிழத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறார். எல்லா ஆட்சியிலும் குற்றச்சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். விரோதத்திலும், குரோதத்திலும், குற்றங்கள் நடைப்பெறும். இதை எந்த ஆட்சியிலும் தடுக்க முடியாது. சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் சரி, ஏதோ ஹிட்லர் ஆட்சி நடந்தாலும் சரி, ஏதோ ஒரு மூலையில் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும்.

Related Stories:

>