சிறுமி தற்கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருப்பூர், பிப்.24:கோவை மாவட்டம் சூலூர் செலக்கரிச்சல் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வேல்முருகன்(23). இவர் காங்கயம் வட்டம் நிழலி சக்திவிநாயகபுரத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவருடன் ‘டிக்-டாக்’ வீடியோ மூலம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கெண்டார். இது தொடர்பாக காங்கயம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு, காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவின் கீழ் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வேல்முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் உத்தரவிட்டார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட வேல்முருகனுக்கு இந்த உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Related Stories:

>