மக்கும் குப்பையை அரைக்கும் இயந்திரம் பழுது

உடுமலை, பிப். 24:உடுமலையில் மக்கும் குப்பையை அரைக்கும் இயந்திரம் பழுதாகி உள்ளது. உடுமலை நகராட்சி சார்பில் மக்கும் குப்பையை அரைத்து உரம் தயாரிக்க, வாரச்சந்தை வளாகம் மற்றும் மாட்டுத் தொழுவத்தில் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு சுமார் 3 முதல் 4 டன் காய்கறி கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பபைகள் தினசரி அரைக்கப்படுகின்றன. இவற்றில் 25 பேர் பணியாற்றுகின்றனர். காய்கறி கழிவுகளை தண்ணீரில் ஊறவைத்து பதப்படுத்தி அரைக்கப்படுகிறது. இந்நிலையில்,கடந்த ஒரு மாதமாக இந்த இயந்திரங்கள் இயங்கவில்லை. பழுது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கழிவுகள் தேக்கம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து சுகாதார அதிகாரி கூறுகையில், ‘‘இயந்திரங்கள் விரைவில் பழுது நீக்கப்படும். அதுவரை தற்காலிகமாக கணபதிபாளையம் குப்பை கிடங்கிற்கு மக்கும் குப்பை கொண்டு செல்லப்படுகிறது என்றார். பல லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். விரைவில் பழுது நீக்கி உரம் தயாரிப்பை தொடர வேண்டும்,’’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: