சுருக்கு கம்பிகள் வைத்து வனவிலங்கை வேட்டையாடினால் நடவடிக்கை

ஊட்டி, பிப். 24: நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளை சுருக்கு வைத்தும், நாட்டு வெடி வைத்தும் வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நீலகிரி வனகோட்டத்தில் 12 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனங்களில் புலி, யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.  வனம் ஆக்கிரமிப்பு, வனத்ைத ஒட்டிய தேயிலை தோட்டங்களில் அதிகரிக்கும் காட்டேஜ்கள், வனங்களுக்குள் செல்லும் நீரோடைகள் ஆக்கிரமிப்பு செய்வது வன விலங்குகள் சென்று வர கூடிய பாதைகளில் வேலிகள், மின்ேவலிகள் போன்றவைகள் அமைப்பதால் வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வர கூடிய சூழல் உருவாகியுள்ளது.

மேலும், நீலகிரியில் வன விலங்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன. ஆனால் அதற்கேற்ப வனப்பரப்பு இல்லாததால் வன விலங்குகள் ஊருக்குள் புக கூடிய சூழல் நிலவி வருகிறது. இதனால், மனிதன் - காட்டுமாடு தாக்குதல் சம்பவங்களும் அதிகம் நடைபெறுகின்றன.

இருப்பினும் வன விலங்குகள் தாக்கி மனிதர்கள் பலியாவதும், நாட்டு வெடி வைத்தும், சுருக்கு வைத்து பன்றிகள், மான், முயல் போன்றவைகள் வேட்டையாடப்படுவது, பன்றிக்கு வைக்கப்படும் வெடியில் சிக்கி காட்டுமாடுகள், மின்சாரம் தாக்கி யானை இறப்பு ேபான்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன.  கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி அருகே உயிலட்டி பகுதியில் விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் புலி ஒன்று சிக்கி கொண்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. வன விலங்குகளை சுருக்கு கம்பிகள் வைத்தும், நாட்டு வெடி வைத்தும் வேட்டையாடுவது வனச்சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா கூறுகையில், ‘‘மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக சுருக்கு கம்பிகளையும், நாட்டு வெடிகளையும் பயன்படுத்துகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும்.சுருக்கு கம்பிகள் வைத்து வேட்டையாடுபவர்கள் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் படி 2 வருடம் வரை சிைற தண்டனை அனுபவிக்க கூடும். வன குற்றங்களில், ஈடுபட்டால் பெரும்பாலும் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் தான் வழக்குபதிவு செய்யப்படும். எனவே வன விலங்குகளை வேட்டையாட கூடாது. அவ்வாறு வேட்டையாடுபவர்கள் மீது வன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Related Stories:

>