வனப்பகுதியில் தீத்தடுப்பு நடவடிக்கை தீவிரம்

பந்தலூர்,பிப். 24: பந்தலூர் அருகே பிதர்காடு வனப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க தீத்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தபட்டுள்ளது.  

 பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கடுமையான பனிப்பொழிவும் பகல் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலும் காணப்படுவதால் வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் நிலை உள்ளது. இதனால் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பதற்காக வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பிதர்காடு வனச்சரகம் மூனநாடு காப்பு காடு பாட்டவயல் அருகே கேரள- தமிழக எல்லைப்பகுதியில் ரேஞ்சர் மனோகரன், வனக்காப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் வனப்பகுதியில் தீ ஏற்படாமல் தடுக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories:

>