அனுமன்சேனா நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

பந்தலூர்,  பிப். 24: பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில்  வசித்து வருபவர் காமராஜ்(48). இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா  மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் நேற்று காலை  வெகு நேரம் ஆகியும் வீடு திறக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் ருக்மணி, வீட்டின் கதவை உடைத்து திறந்துபோது காமராஜ் தூக்கில் தொங்கி இருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து சம்பவம்அறிந்து வந்து தேவாலா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீஸ் விசாரணையில், காமராஜ் தனது மனைவி இறந்ததால், கடந்த சில மாதமாக விரக்தியில் இருந்துள்ளார். தன்னுடைய  இரண்டு பிள்ளைகளும் பெரம்பலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கும்  நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை  செய்துள்ளது தெரியவந்தது.

Related Stories:

>