மதுக்கரை வனத்தில் காட்டு தீ

கோவை, பிப். 24: கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால்,மதுக்கரை வனச்சரகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மரங்கள், செடிகள் கருகி வருகின்றன. வறட்சியால் காட்டு தீ ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதை தொடர்ந்து வனப்பகுதியில் தற்போது 6 கி.மீ தொலைவிற்கு தீ தடுப்பு கோடு அமைக்கப்பட்டுள்ளது. மதுக்கரை வனச்சரகம் நவக்கரை, கரடிமடை என இரண்டு செக்ஷன்களை கொண்டது. இதில், வாளையாறு முதல் கோவை குற்றாலம் வரை உள்ள பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் இருக்கிறது. இப்பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், கல்லூரிகளில் வனத்துறையினர் காட்டு தீ தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், வனத்ைதயொட்டிய கிராமங்களில் போஸ்டர்கள் அடித்தும், மாலை நேரங்களில் தண்டோர போட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். காட்டு தீ குறித்து கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மதுக்கரை ரேஞ்சர் சீனிவாசன் கூறுகையில், ‘‘மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு தீ ெதாடர்பாக பொதுமக்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். காட்டு தீ தொடர்பாக கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வனத்தில் தீ ஏற்பட்டால் பொதுமக்கள் மாவட்ட வன அலுவலகம் அல்லது வனத்துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். வனத்தில் தீ ஏற்பட்டால் உடனடியாக சென்று தீயை அணைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள், தீ பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: