×

நாகையில் கட்டுப்பாட்டு அறையின் ஊடக சான்றளிப்பு மையத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

 

நாகப்படினம், ஏப்.21: சட்டசபை தேர்தல் முன்னிட்டு நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் தொடர்பான செய்திகள் தினசரி நாளிதழ்களில் ஆய்வு செய்யப்படுவதை தேர்தல் செலவீன பார்வையாளர் நர்சிங்குமார்கல்கோ ஆய்வு செய்தார்.
சட்டசபை தேர்தல் முன்னிட்டு நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இங்கு தேர்தலை கண்காணித்திட அமைக்கப்பட்ட பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்புக்குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றையும், தேர்தல் தொடர்பான செய்திகள் தினசரி நாளிதழ்களில் ஆய்வு செய்யப்படுவதையும் மேலும் ஊடகசான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தையும் நாகப்பட்டினம் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் செலவீன பார்வையாளர் நர்சிங்குமார்கல்கோ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மாவட்ட சமூகநல அலுலலர் திவ்யபிரபா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Nagaon ,Nagapadinam ,Nagapattinam Collector's Office ,
× RELATED ராமேஸ்வரத்தில் பரபரப்பு பற்றி எரிந்தது படகு