கோவை மத்திய சிறையில் ரூ.2.39 கோடியில் அடிப்படை வசதி

கோவை, பிப்.24: கோவை மத்திய சிறை 160 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. சிறை டவர் பிளாக், வால் மேடு பிளாக், தொழிற்சாலை, யோகா கூடம், சமையல் கூடம் போன்றவை இருக்கிறது. சிறை அறைகளில் 2,248 பேர் அடைக்க அறை வசதி இருக்கிறது. தற்போது 1,820 கைதிகள் உள்ளனர். கைதிகளுக்கு கழிவறை மற்றும் குளியலுக்காக அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது. குளியல் அறை, கழிவறைகளில் பைப் மற்றும் டேப் பழுதடைந்து காணப்படுகிறது. சிறை வளாகத்தில் உள்ள கழிவறைகளை முறையாக பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுகிறது. சிறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது இது தொடர்பாக கைதிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறையில் கழிவறை, குளியல் அறை பராமரிப்பு, சீரமைப்பு பணி உத்தரவிடப்பட்டுள்ளது. 2.39 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் நடத்தப்படவுள்ளது.

Related Stories: