×

இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் ‘லீவு’

 

திண்டுக்கல், ஏப். 21: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், உரிமம் பெற்று இயங்கி வரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும் ஏப்.21ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் ஏப்.23ம் தேதி வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே.4ம் தேதியும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : TASMAC ,Dindigul ,District ,Collector ,Saravanan ,Dindigul district ,Tamil Nadu ,
× RELATED குலசை கோயில் வருஷாபிஷேக விழா