சிறந்த மகசூலுக்கு விதை பரிசோதனை அவசியம்

ஈரோடு, பிப். 24: ஈரோடு விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் வனிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நெல்,  சோளம், மக்காச்சோளம் மற்றும் தானிய வகை விதைகளின் தரத்தை  கண்டறிந்து தரமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும். இதில் விதையின்  முளைப்புத்திறன், ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியவற்றை  கண்டறிந்து தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பதன் மூலம் அதிக மசூல் பெறலாம்.  மேலும், விதைகளில் உள்ள ஈரப்பதம் கண்டறியப்படுவதால், அதன்  அடிப்படையில் விதைகளை உரிய காலம் வரை சேமிக்கலாம்.இதேபோல் புறத்தூய்மை,  பிற ரக கலப்பு போன்ற அனைத்து காரணிகளிலும் தேர்ச்சி பெற்ற விதைகளை  உபயோகிக்க வேண்டும். பிற ரக கலப்பு என்பது ஒரே பயிரின் வேறு ரக விதைகள்  கலந்திருப்பதாகும்.  

இதை தவிர்க்கவும், சிறந்த மகசூல் பெற விவசாயிகள்  தங்களிடம் இருப்பு உள்ள விதைகளையும், விதை விற்பனையாளர்கள் விற்பனை  செய்யும் விதைகளையும் விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து  தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும்.விதை பரிசோதனை செய்ய ஈரோடு  சத்தி ரோடு வீரபத்திரா 2வது வீதியில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தினை  அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: