திருப்பூர், பிப்.24: கோவை மாவட்டம் சூலூர் செலக்கரிச்சல் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வேல்முருகன்(23). இவர் காங்கயம் வட்டம் நிழலி சக்திவிநாயகபுரத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவருடன் ‘டிக்-டாக்’ வீடியோ மூலம் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கெண்டார். இது தொடர்பாக காங்கயம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு, காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவின் கீழ் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.