வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடியில் 3.10 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

வேட்டவலம், பிப்.23: வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடியில் ₹3.10 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹3.10 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும், கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். இதில், ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஆறுமுகம், ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>