மிரட்டி லஞ்சம் வாங்கும் உணவு பாதுகாப்பு அதிகாரி குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் காட்பாடியில் கடைக்காரர்களிடம்

வேலூர், பிப்.23: காட்பாடியில் வியாபாரிகளை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக உணவு பாதுகாப்பு அதிகாரி மீது குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மனு அளித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. இதில் டிஆர்ஓ பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் நீண்டவரிசையில் காத்திருந்து பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். அப்போது, மேல்மொணவூர் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : எங்கள் கிராமத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான ஆதிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான கோயில் என்பதற்கான கல்வெட்டு உள்ளிட்ட ஆதாரங்கள் உள்ளன. தற்ேபாது கோயில் சிதிலமடைந்துள்ளதால் ஊர் மக்கள் இணைந்து புனரமைப்பு பணிகளை தொடங்கினோம். இப்பணிகள் பாதி முடிந்துள்ள நிலையில் தற்போது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து, சாலை அகலப்படுத்த வேண்டிய பணிகள் உள்ளதால் புனரமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே கோயில் பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கோயில் கட்டிக்கொள்ள அனுமதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

இதேபோல் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஞானவேல் தலைமையில் வணிகர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காட்பாடி பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேல். அவரது உதவியாளர் முன்னா இருவரும் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராகவும், அச்சட்டத்தை தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இருவரும் கடைக்காரர்களை மிரட்டி லஞ்சம் வாங்கி வருகின்றனர். முறையாக உரிமம் புதுபித்தல் பெற விண்ணப்பித்தும், உரிமையை புதுப்பித்து தரவில்லை. பணம் செலுத்திய வணிகர்கள் 90 நாட்களில் பெற வேண்டிய உரிமத்தை இன்னும் ெபறவில்லை. காரணம் அவர் எதிர்பார்த்த லஞ்ச பணம் குறைவாக உள்ளதால் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. எனவே உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தவேல் மற்றும் அவருடைய உதவியாளர் முன்னா இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்பாடி அனைத்து வணிகர்களின் உரிமைகள் புதுப்பித்தும் இது போன்ற அதிகாரிகளிடமிருந்து வணிகர்களை காப்பற்ற வேண்டும். இதேபோல் வேலூர் ஆரணி சாலை, சுண்ணாம்புக்கார தெரு, அண்ணா பஜார், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ரவுடிகளின் தொல்லையால் வணிகர்கள் அச்சத்துடன் வணிகம் செய்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

Related Stories:

>