1000 விதை பந்துகள் வீச்சு பாகாயம், பாலமதி பகுதிகளில்

வேலூர், பிப்.23:மாற்றுத்திறனாளிகள் கிரீன்வே தொண்டு நிறுவனம் நடத்திய மரம் நடுவிழா மற்றும் விதைப்பந்து விதைக்கும் விழிப்புணர்வு நிகழச்சி நேற்று முன்தினம் பாகாயத்தில் நடந்தது. நிகழச்சிக்கு சிஎம்சி மறுவாழ்வு பயிற்சி மைய பிசியோதெபிஸ்ட் ரூபி நாக்கா தலைமை தாங்கினார். வேலூர் 10வது பட்டாலியன் தேசிய மாணவர் படையின் மக்கள் தொடர்பு அலுவலர் என்சிசி முதன்மை அலுவலர் ராஜா முன்னிலை வகித்தார். தொடர்ந்து, பாகாயத்தில் உள்ள தொண்டு நிறுவன வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதைதொடர்ந்து, 1000 விதை பந்துகள் தயாரிக்கப்பட்டு, பாகாயம், பாலமதி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் வீசி பொதுமக்களிடடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் பரத்ராஜன் நன்றி கூறினார்.

Related Stories:

>