பயங்கரவாதிகள் போனில் கொலை மிரட்டல் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்க நிறுவனருக்கு

வேலூர், பிப்.23: சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்க நிறுவனருக்கு மர்ம ஆசாமிகள் கொலை மிரட்டல் விடுப்பதாக எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.வேலூர் எஸ்பி அலுவலகத்தில் சிவசக்திசேனா இந்து மக்கள் இயக்க நிறுவனர் ராஜகோபால் குருஜி நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புளுக்கு எதிராகவும், மதமாற்றம் செய்பவர்களுக்கு எதிராகவும், மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மூலமாகவும், பொது மேடையிலும், பேஸ்புக் வாயிலாகவும் கருத்துகளை தெரிவித்து வருகிறேன். இதனால் சில பயங்கரவாதிகள் மூலம் எனக்கு போனில் கொலை மிரட்டல் வந்தது. போலீசில் புகார் செய்துள்ளேன். அதற்கான ஆதாரங்கள், போன் எண்கள், உரையாடல் உள்ளிட்ட விவரங்களை இதற்கு முன்பு எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்தேன். இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை. நான் திருச்சியில் இருக்கும்போது கூட எனக்கு ஒருவர் போன் செய்து வேலூருக்கு செல்லமாட்டாய்’ எனக்கூறி மிரட்டினார். இதுதொடர்பாக திருச்சி போலீசில் புகார் செய்தேன். மிரட்டல் சம்பவங்களால் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய அச்சமாக உள்ளது. இதேபோல் வேலூர் இப்ராகிமுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>