கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் புதிய அங்கன்வாடி மையம் எம்எல்ஏ திறந்து வைத்தார்

கடையநல்லூர், பிப்.23:   கடையநல்லூர் நகராட்சி, கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோயில் அருகே  தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 8 லட்சத்தில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை முகமது அபுபக்கர் திறந்துவைத்து அதன்சேவையை துவக்கிவைத்துப் பார்வையிட்டார்.  இதேபோல்  பிலால் பள்ளிவாசல் எதிர்புற பகுதியில் உள்ள வாறுகாலில் ரூ.3 லட்சத்தில் சிமென்டால் அமைக்கப்பட்ட மூடியையும், நயினார் முகமது பள்ளிவாசல் மையவாடியில் ரூ.4 லட்சத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரையும் திறந்துவைத்தார். தொடர்ந்து இக்பால் நகர் தெப்பக்குளத்தைச் சுற்றி  ரூ.15 லட்சத்தில் நடைபாதை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 நிகழ்ச்சிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் இக்பால், கடையநல்லூர் நகரத் தலைவர் செய்யது  மசூது, ரகுமத்துல்லா, அங்கன்வாடி பணியாளர்கள், ஜமாத் நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: