பஸ் மோதி காவலாளி பலி

ஸ்ரீபெரும்புதூர்: தனியார் தொழிற்சாலை பஸ் மோதியதில், காவலாளி பரிதாபமாக இறந்தார். வாலாஜாபாத் அருகே பாலூர் கிராமம், பழனியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார்  தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை ஜெயக்குமார், வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.  வண்டலூர் - வாலாஜாபாத் சாலை வழியாக பண்ருட்டி கண்டிகை அருகே சென்றபோது, பின்னால்,  தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த பஸ், சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்து ஒரகடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி  பெரும்புதூர்  அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  

Related Stories:

>